Select Page

நெருக்கடி நேரங்களுக்கான ஆன்மீக ஆதாரங்கள்

அன்பார்ந்த டிடிசி நண்பர்களே,

சமாதானம் உங்களோடு இருப்பதாக.

நாம் அனைவரும் ஓர் நெருக்கடியான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  திடீரென்று தோன்றிய கோவிட்-19 ஏறக்குறைய  ஒரே நாள் இரவில் பல மக்களின் வழ்க்கையை தலை கீழாக மாற்றியது.

இந்த உலகளாவிய நோய் தொற்றின் தாக்கமானது ஏழை அல்லது பணக்காரன், இளையவர் அல்லது முதியவர், பெண் அல்லது ஆண், தனியாய் இருப்பர் அல்லது குடும்பத்துடன் இருப்பவர் என்று யரையும் விட்டுவைக்கவில்லை.

நிலைமையைச் சமாளிக்க பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மிக குறிப்பிடத்தக்க வகையில் சோதிக்கப்பட்ட ஒர் முக்கிய அம்சம் என்னவென்றால் அது நமது ஆன்மீக மனநிலையின் நெகிழும் தன்மையகும்.

வாழ்வின் இயல்புத்தன்மையை இழந்து விட்டதால் அதிகரித்த மன சோர்வினாலும் அழுத்தத்தாலும் இந்த கலவரமான நிச்சயமற்ற சூழலைக் குறித்து பலரும் பயத்துடனும் பதட்டத்துடனும் இருக்கின்றார்கள். 

 நாங்கள் உங்களுடன் “நெருக்கடி நேரங்களுக்கான ஆன்மீக ஆதாரங்கள்” என்ற தலைப்பில் தொடர்ச்சியாக சில காரியங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். இது பளுவும் சோர்வும் நிறைந்த இக்காலக்கட்டத்தின் மத்தியில் நம் ஆன்மீக புத்துணர்ச்சியை கண்டுகொள்ள உதவி புரியும். இவற்றில் நீங்கள் வேதத்தையும்  ஆன்மீக வழிகாட்டிகளின் பிரதிபலிப்பையும் பார்ப்பதற்கு அழைக்கப்படுகின்றீர்கள். அவைகள் தற்கால நோய் தொற்றின்போது நமக்கு மிகவும் விசேஷமான வகையில் உதவக்கூடிய  என்றும் நிலை நிற்பதான ஞான வார்த்தைகளையும், காலத்தால் சோதிக்கப்பட்டு நிலைநிற்கும் செயல்முறைகளையும் கொண்டு வருகின்றன.நாம் ஆவிக்குரியவற்றில் வளப்படும்படி அவற்றின் உள்நோக்கை அறுவடை செய்து சிறு சிறு பகுதிகளாக  வரிசைப்படுத்தி பயிற்சி செய்வோம்.

இதன் முதல் கட்டத்தில் “தேவனில் இளைப்பாறுதல்: மொளனமாய் இருக்கப் பழகுதல்” என்னும் தலைப்பில் மொளனமாய் இருப்பதற்கான பயிற்சியின் வழியாய் அமைதியாய் இருப்பது எப்படி என்பதை கண்டறிவோம். இங்கே நாம் சங்கீதக்காரனையும் பாலைவன தந்தைகளையும் தாய்களையும் பார்த்து இந்தப் பயிற்சிகள் வாழ்க்கைப் பளுவின் மத்தியில் நம்மை   எவ்வாறு வளப்படுத்தும் என்று கற்றுக்கொள்கின்றோம்.

இந்த வழக்கத்துக்கு மாறான காலகட்டத்தில்,ஊரடங்கின் காரணமாக வெளிப்புறத்தில் ஓர் பெரிய அமைதி நிலவியபோதும் நம் இதயங்கள் பாரமாகி கலவரப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் கண்டுக்கொள்ள முடிகின்றது. நமக்குள்ளே கவலைகள்பொங்குவதையும் அமைதியின்மையால் உணர்ச்சிகள் தளர்ந்து போனதையும்  உணர்கின்றோம் .

இந்த முதல் பயிற்சியானது நாம் இவ்வகையான கவலையை புரிந்து கொண்டு அதை கையாள்வதற்கு எப்படி உதவுவது என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாம் நம்  கவலைக்கான  காரணம் என்ன என்பதை அறிந்து பின், வேத வசனத்தைக்கொண்டு அடையாளப்படுத்தி தேவன் கொடுக்கும் வளங்களைப்பயன்படுத்தி ஓர் முழுமையான வாழ்க்கையை மீண்டும் தொடருவோம். ஓர் 15 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு  இந்த பயிற்சியில் ஈடுபடுவதற்கு வாருங்கள் என்று உங்களை வரவேற்கிறோம்.

குருமார்களின் குழு
Chaplaincy Team