Select Page

தேவனில் இளைப்பாறுதல்: மொளனமாய் இருக்கப் பழகுதல்

‘உள்ளுக்குள் விழிப்பாய் இருங்கள்; வெளியேயும் விழிப்பாய் இருங்கள்” – Abba Poemen, a desert father

மொளனம் என்பது காத்துக்கொண்டிருப்பதற்கான ஒரு வழி, பார்த்துக்கொண்டிருப்பதற்கான ஒரு வழி, நமக்குள்ளேயும் வெளியேயும் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை கவனித்துக் கொண்டிருப்பதற்கான ஒரு வழி. இது இதய உள்ளறைகளையும் வாழ்வின் மையத்தையும் நிற்கச்செய்து பின்ஆராய்ந்து பார்க்கும் உள்ளார்ந்த பழக்கத்தின் ஓர் வழி ஆகும். இது நிறைவுக்குள் கடந்து செல்லும் ஒரு வழி எனவே முடிவில் நாம் வெறுமையாய் போவது இல்லை,. மொளனம் என்பது ஒருபோதும் வார்த்தைகளை மட்டும் இடை நிறுத்தம் செய்து வைப்பதல்ல ; அப்படி இருந்தால் மொளனம் என்னும் வார்த்தையின் வரையரை மிகவும் கட்டுப்பாடான, மிகவும் எதிர்மறையான ஒன்றாகவே இருக்கும். மாறாக இது எல்லாவற்றையும் ஒன்றாய் பிடித்து நிறுத்தகூடிய ஓர் இடைவெளி – உண்மையில் இது பேசிய மற்றும் பேசாத வார்த்தைகளை அர்த்தமுள்ளதாய் மாற்றுகின்றது. மொளனம் நம் மனப்பான்மையையும் செயலையும் இணைக்கும் பசையாக செயல்படுகின்றது. மொளனம் நிறைவானது,அது வெறுமையனது அல்ல. இது இல்லாமல் இருப்பது அல்ல இருப்பதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது”.– John Chryssavgis, In the Heart of the Desert, pp.45-46.

  படி 1: அமர்ந்திருத்தல்: ( சத்தமில்லாமல்)

* நீங்கள் சிறிது நேரம் வசதியாக அமர்ந்து கொள்ளும்படி ஓர் உகந்த இடத்தை உங்கள் வீட்டில் தெரிந்து கொள்ளுங்கள்.        

  • சிறிது ஆயத்தமாகும் படி சில ஆழமான சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் கண்களை மூடிக்கொள்ளலாம்.

அவ்வறு செய்யும் போது, நீங்கள் என்ன கேட்க்கின்றீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களை சுற்றியுள்ள சத்தத்தை கவனியுங்கள். அவை விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளின் சத்தமாக இருக்கலாம்.வேலைசெய்து கொண்டிருக்கும் துணைவர்களின் சத்தமாக, பறவைகளின் கீச்சு சத்தமாக, குளிர்சாதன பெட்டியின் கல கலப்பு சத்தமாக  அல்லது முடி உலர்த்தியில் இருந்து வருகின்ற சத்தமாக இருக்கலாம். படி:2 செவிமடுத்தல் (உட்புற குரல்கள் )

  • உங்களுக்குள்ளே என்ன நடக்கின்றது எனபதில் கவனம் செலுத்துங்கள். இவைகள் உங்கள் மனம் மற்றும் இருதயத்திலிருந்து வரக்கூடிய குரல்கள்.
  • அவைகள் வெளியே இருந்து வருகின்ற ஓர் சத்தத்தினால் தூண்டப்படலாம் -குழந்தைகள் விசைப்பலகையை தட்டுவது, நீங்கள் இன்னும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளைப் பற்றி நினைப்பூட்டலாம்.
  • அல்லது அவை உள்ளிருந்து வரும் ஒரு சிந்தனையினால் எழுச்சி பெறலாம் – ஓர் நினைவு மேல் எழும்பி அது குற்ற உணர்ச்சி, பயம் அல்லது ஒருவித பதட்டமான நிலையை தூண்டிவிடாலாம்

*அவைகளுக்கு கவனமாக இருங்கள். அவற்றை உங்கள் மனதிலிருந்தும் இதயத்திலிருந்தும் மூட முயற்சிக்காதீர்கள். அவைகள் இருப்பதை அறிக்கை செய்து கொண்டு, ஜெபத்தில் கடவுளிடம் அவைகளை ஒப்படையுங்கள். நீங்கள் விரும்பினால், பின்வரும் ஜெபத்தை ஏறெடுக்கலாம்:

“ஆண்டவரே,  நான் இருக்கின்ற நிலைமையிலே உம்மண்டை வருகின்றேன், நான் இந்த சத்தங்களையெல்லாம் உம்மிடம் ஒப்படைக்கின்றேன்.இயேசு புயலை அடக்கியது போல நீர் அவைகளை அடக்கிப்போடும்.”

படி 3: ஆதாரம் (வேதத்திற்கு திரும்புதல்)

*இந்த குரல்களில் சிலவற்றை நீங்கள் கவனித்த பிறகு தேவனுடைய வார்த்தைக்கு நேராக திரும்புங்கள்.  * நீங்கள் மெதுவாக அதைப் படிக்கும்போது தேவ வார்த்தை உங்களிடம் பேசட்டும்.தேவனுடைய இளைப்பாறுதல்: மொளனமாய் இருக்க பழகுதல்என்ற நமது கருப்பொருளுக்காக  62-ம் சங்கீதத்தை தெரிவு செய்துள்ளோம். புதிய சர்வதேச பதிப்பில்(New International Version) சங்கீதம் 62:1-2 வசனங்களை மெதுவாகப் படியுங்கள் மெய்யாகவே என் ஆத்துமா தேவனில் இளைப்பாறுதலைக் கண்டடைகின்றது,.என் இரட்சிப்பு அவரிடம் இருந்து வருகின்றது.;மெய்யாகவே அவர் என் கன்மலையும் என் இரட்சிப்புமானவர்,.அவர் என் கோட்டை, நான் ஒரு போதும் அசைக்கப்படுவதில்லை. இரண்டு வசனங்களையும் மெதுவாக இரண்டாவது முறையாகப் படியுங்கள், ஆனால் இப்போது ஆங்கில தரநிலை பதிப்பில்( English Standard Version)

கர்த்தரை மட்டுமே நோக்கி என் ஆத்துமா அமைதியாய் காத்திருக்கின்றது.
அவரிடம் இருந்து என் இரட்சிப்பு வருகின்றது.
அவர் மாத்திரமே என் கன்மலையும் இரட்சிப்பும்,கோட்டையுமானவர். நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.

  • சங்கீதம் 62:1-2 ன் இரண்டு விதமான பதிப்புகள், தேவனுடைய இளைப்பாறுதல் என்பது தேவனுக்கு முன்பாக நாம் மௌனமாகக் காத்திருக்கும் ஒரு காலத்தை உள்ளடக்கியது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. தேவன் நம்மை காத்துக்கொள்ளும்படியாய் நாம் அமைதியாய் காத்திருக்கின்றோம்.
  • சங்கீதக்காரன் முன்பு வலிமையான நிலையில் இருந்தபோதும் (வசனம் 4) தான் பலவீனமான இடத்தில் இருக்கும் யாரோ ஒருவனாக வசனம் 3-ல் தன்னைக் காட்டுகிறான். உங்களுடைய தற்போதைய நிலைமையைப் பிரதிபலிக்க இந்த வசனங்கள் உங்களுக்கு உதவக்கூடும் .
  • நீங்கள் விரும்பும் எந்தவொரு பதிப்பிலும் முழு சங்கீதத்தையும் மெதுவாகப் படிக்க சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்களுடன் பேசும் இடங்களில் நின்று, உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றி கடவுளுடன் பேசுங்கள்.

படி 4: திரும்ப வருதல் (தேவ பிரசன்னத்தோடு வாழ்க்கையில் திரும்ப ஈடுபடுதல்)

* நீங்கள் தேவனுடைய வார்த்தையிலும், தேவனுடனான உங்கள் உரையாடலிலும் மூழ்கி போதுமான நேரத்தை செலவிட்ட பிறகு, தேவன் உங்களுக்குக எதைக் கொடுத்தாரோ அதில் இளைப்பாறிக்கொண்டே உங்கள் நேரத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்.

  • இது தேவனுடைய வாக்குத்தத்தத்தை நினைவுப்படுத்துகின்ற ஒரு வார்த்தையாக இருக்கலாம், தேவனுடைய பிரசன்னத்தை உங்களுக்கு உறுதி செய்கின்ற ஒரு கருப்பொருளாக இருக்கலாம் அல்லது தேவன் உங்களுக்கு கொடுத்த வேறு விதமான ஆதாரங்களாக இருக்கலாம்.
  • அதை உங்கள் குறிப்பேட்டில் எழுதிக்கொள்ளுங்கள் அல்லது அந்த நாளின்போது அதை திரும்பி பார்க்கும்படி முக்கியமான ஓர் இடத்தில் குறித்துக்கொள்ளுங்கள்.
  • கடைசி சில நிமிடங்கள் அமைதியாய் இருப்பதற்கு செலவிடுங்கள்.
  • பின் தேவன் உங்கள் இருதயத்தில் பதியச்செய்த ஆதாரங்களுடன் அந்த நாளுக்குறிய வேலைகளை மெதுவாக செய்ய ஆரம்பியுங்கள்.
  • நீங்கள் இந்த குறுகிய நேர மொளன தியனத்தை முடிவுக்கு கொண்டு வர பின் வரும் ஜெபத்தை ஏறெடுக்கலாம்:

“தேவனே, நான் உம்மேல் என் நம்பிக்கையை வைத்து, உம்முடைய பதிலுக்காக காத்திருக்கின்றேன்.”

  • நீங்கள் உங்கள் வேலைகளை செய்ய ஆரம்பிக்கும்போது தேவ பிரசன்னம் உங்களோடு செல்வதாக.